×
 

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... டால்பின் நோஸ் காட்சி முனை தற்காலிகமாக மூடல்...!

தற்போது பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பயணிகள் வருகை குறைவாக இருக்குமாம். இதனை பயன்படுத்தி வனத்துறை மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

குன்னூர், இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மலைவாசஸ்தலம். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைவாசஸ்தலம் இது. பசுமையான சூழல் மற்றும் இனிமையான காலநிலைக்கு பெயர் பெற்ற குன்னூர், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களுடன் தேயிலை உற்பத்திக்கு ஒரு புகலிடமாகும். இந்த நகரம் பல்வேறு வகையான காட்டுப்பூக்கள் மற்றும் பறவைகளுக்கும் பிரபலமானது. 

சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்கும் இங்குள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை ரயில், குன்னூரின் அழகிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக ஒரு அழகிய பயணத்தை வழங்குகிறது.

டால்பினின் மூக்கை ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை டால்பின் நோஸ் என அழைக்கப்படுகிறது இது 1,550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் சுற்றியுள்ள மலைகள் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சியின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. இந்த இயற்கையான பாறை பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: தடைப்பட்ட குடிநீர் விநியோகம்! பாறை இடுக்கில் சொட்டும் நீரை பிடித்துச் செல்லும் அவலம்…

இங்கே சென்றால் மிக அழகான மலையேற்ற அனுபவத்தை நீங்க பெற இயலும். பசுமை வாய்ந்த சுழல், சுத்தமான காற்று என்று மனதை வசீகரிக்கும்.மலையேறும் பொது நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.ஆனால் இதற்கு வனத்துறையினரிடம் முன்பே அனுமதி பெற வேண்டும். 

மார்ச் முதல் மே மாதம்தான் மலை ஏறுவதற்கு சரியான நேரமாகும். தற்போது பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால் நவம்பர் முதல் பிப்ரவரிமாதம் வரை பயணிகள் வருகை குறைவாக இருக்குமாம். இதனை பயன்படுத்தி வனத்துறை மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம்   உத்தரவின் படி குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட டால்பினோஸ் காட்சி முனைப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் நாளை (12/09/2025)முதல் மறு அறிவிப்பு வரும் வரை டால்பினோஸ் காட்சி முனை தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க: போதும்! நிறுத்திக்குங்க! இனி அப்படி பண்ணாதீங்க! ரஷ்யாவிற்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share