×
 

கோடிக்கணக்கில் பணம்; கட்டுக்கட்டாய் ஆவணங்கள்... பிரபல சிமெண்ட் ஆலைக்கு வருமான வரித்துறை வைத்த செக்...!

சமயபுரத்தில் சிமெண்ட் ஆலையில் நடத்தப்பட்ட வரி ஏய்ப்பு சோதனையில் கட்டுக்கட்டாய் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்

திருச்சியில் சிமெண்ட் ஆலையில் இரண்டு நாள் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவடைந்தது; கணக்கில் வராத கோடிக்கிலான ஆவணங்கள் மற்றும் பணத்தையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்  மாருதி சிமெண்ட் ஆலையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி பில்கள் கொண்டு சிமெண்ட்க்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்கியதாகும், மேலும் போலி பில்கள் மூலம் சிமெண்ட் விற்பனை செய்ததாகும் எழுந்த புகாரின் பேரில் நேற்று காலை 10 அளவில் வருமானவரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் (ஜிஎஸ்டி) திடீரென சிமென்ட் ஆலையில்,உரிமையாளர் வீட்டில் மற்றும் ஆலையின் துணை தலைவர், ஆலையின் மேலாளர் வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை இரவு 3 மணி வரை சோதனை நடத்தினர்.

 தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலையில் ஆய்வு மற்றும் டேட்டாக்களை சோதனையில் செய்ததில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றதாகும் பல ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

இதையும் படிங்க: பணத்த வாங்கிட்டு பொறுப்பு தராரு... வடசென்னை மா. செ. மீது தவெக தொண்டர்கள் புகார்...!

இதில் பல வருடங்களாக ஆண்டிற்கு பல டன் கணக்கில் விற்பனை காட்டிய இந்த சிமெண்ட் ஆலை நிறுவனர் கடந்த சில வருடங்களாக சிமென்ட் விற்பனை கணக்கையும், சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களையும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதனால் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரி பில்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இரண்டு நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையின் முடிவில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: “எடப்பாடி என்கிற துதிப்பாடியின் பேச்சு இனி எடுபடாது” - இபிஎஸை மீண்டும் அட்டாக் செய்த பொன்முடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share