×
 

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு..? வெடிக்கும் பிரச்சனை..!

திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக வைரலாகி வரும் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி முக்கியமான போட்டியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இங்கு திமுகவின் இனிகோ இருதயராஜ், அதிமுகவின் ராஜசேகரன் உள்ளிட்டோருடன் மும்முனைப் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிலையில், அன்றிரவு திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் வீடியோக்கள் வைரலாகின.திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மதுரம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இரவு 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்ற சந்தேகம் தவெக தொண்டர்களுக்கு எழுந்தது.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்த பிறகும், தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும், கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாகவும் தவெகவினர் குற்றம் சாட்டினர். இதை எதிர்த்து தவெக தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

சில வீடியோக்களில், அலுவலர்கள் கதவை மூடி உள்ளே செயல்படுவதும், தவெகவினர் வெளியில் போராட்டம் நடத்துவதும் பதிவாகியுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களை பிடித்து சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தனர். என்ன சொல்வது என தெரியாமல் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share