×
 

BLAST-U மோகம்... படம் பார்க்க லீவு..! பெண்ணின் கால் விரலை எலிகள் குதறிய சம்பவம்... EPS விமர்சனம்..!!

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கால்விரலை எலிகள் கடித்து குதறிய சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கால்விரலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் சுகாதார நிலைமையை இந்த சம்பவம் பெரும் கேள்விக்கு ஆளாக்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என்று கூறினார்.

அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு என்று கேள்வி எழுப்பினார் இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்தார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன என்றார்.

இதையும் படிங்க: "வீட்டிலிருந்தே அப்பாயிண்ட்மென்ட்"..! இனி அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு அவசியம் இல்லை..!!

நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: துஷ்ட சக்தி த.வெ.க. அரசு..! உயிருக்கு விலை வைக்கும் அவலம்... அதிமுக கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share