காவல்துறை பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர்.. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே?... சீறும் மக்கள்...!
பணி முடிந்து வீடு திரும்பிய காவல்துறை பெண் ஊழியரிடம் அத்து மீறிய ஓட்டுநர் ஓசூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்
ஓசூர் அருகே பாகலுார் அடுத்துள்ள சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (36) இவரது கணவர் வைகுண்டராமன் இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாம் நிலை காவலராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வேலை பார்த்து வந்த வைகுண்டராமன் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு காவல் துறையில் கணினியில் டேட்டா என்டரி செய்யும் ஆபரேட்டராக வாரிசு வேலை கிடைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த ராஜேஸ்வரி அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலையத்தில் பணி புரிந்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அவர் ஓசூரில் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையா?... சல்லி, சல்லியாய் நொறுங்கிய எலும்புகள்... வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்...!
தினந்தோறும் ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் பணிகளை முடித்து விட்டு ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் தனது கிராமமான சத்தியமங்கலத்திற்கு செல்வது வழக்கம் , அதேபோல கடந்த 16 ஆம் தேதி மாலை பணி முடிந்து ராஜேஸ்வரி ஒரு தனியார் பேருந்தில் தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அவர் தனது வீட்டிற்கு சுமார் 2 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும், பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு அவர் நடந்து சென்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் மூர்த்தி (37) தனது டெம்போ டிராவலர் வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ராஜேஸ்வரியை வாகனத்தில் ஏற்றி உள்ளார்.
அப்போது ராஜேஸ்வரி தனது கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மூர்த்தியுடன் நம்பிக்கையுடன் வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற மூர்த்தி டெம்போ ட்ராவலர் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே இருந்த ராஜேஷ்வரியை தாக்கி அவரிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ராஜேஸ்வரி மூர்த்தியை தள்ளி விட்டு வாகனத்திலிருந்து இறங்கி தப்பித்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி தனது வயதான பார்வை இழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பாகலூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை தேடிய போது அவர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து டெம்போ டிராவலர் வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்தனர் . தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை இழந்த ராஜேஸ்வரி பார்வை இழந்த அவரது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் அவர் காவல்துறையில் பெறும் குறைந்த ஊதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார் தனது சொந்த ஊரை சேர்ந்த அண்ணா என்று அழைத்து வந்த நபரே தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தால் மனம் உடைந்துள்ள ராஜேஸ்வரி இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனிடையே மீண்டும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதால், புதிதாக ஆட்சி அமைத்த தவெக அரசு அறிவித்த சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!