×
 

இரண்டு நாட்டு ராணுவத்தை மொத்தமா அழிச்சிட்டோம்! ஒரே ஒரு தாக்குதல் போதும்!! ட்ரம்ப் சுயதம்பட்டம்!

வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிட்டது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா: சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவத்தை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப், “வெனிசுலாவைப் பாருங்கள், ஈரானைப் பாருங்கள். நாங்கள் அவர்களின் ராணுவத்தையே ஒழித்துவிட்டோம். எனது முதல் பதவிக்காலத்தில் ஆயுதப்படைகளை வலுப்படுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளே இந்த ராணுவ வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “உலகின் மிகவும் வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா உருவானது தற்செயலான நிகழ்வு அல்ல. அமெரிக்கா விரும்பினால், ஈரானில் எஞ்சியிருக்கும் தலைமையை ஒரே அடியில் ஒழித்துவிடும் திறன் நமக்கு உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள். ஒரே தாக்குதலில் அவர்களை வீழ்த்திவிட முடியும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

எனினும், “ஆனால் நாம் அப்படிச் செய்யப் போவதில்லை. ஏனென்றால், அப்படி செய்தால் பேச்சுவார்த்தை நடத்த யாரும் மிஞ்ச மாட்டார்கள்” என்றும் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சு உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் ராணுவத்தை அமெரிக்கா முற்றிலும் அழித்துவிட்டதாக அவர் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அமெரிக்க இராணுவத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதன் பலனாகவே தற்போது அமெரிக்கா உலக அரங்கில் வலிமை மிக்க நாடாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் வாதிட்டார். அமெரிக்காவின் ராணுவ திறன் குறித்து பெருமிதம் கொள்ளும் வகையில் அமைந்த இந்த உரை, அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், சர்வதேச அளவில் இந்தப் பேச்சு பதற்றத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவுகள் மேலும் மோசமடையும் அபாயம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க அதிபரின் இந்த உரை சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தாலும், உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப்பின் தைரியமான மற்றும் நேரடியான பேச்சு பாணி மீண்டும் ஒருமுறை உலக ஊடகங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: இஸ்ரேல் மீது அனுதாபப்படுவர் ட்ரம்ப் மட்டும்தான்! அவரையே பிரச்னையா பாக்காதீங்க! ஜே.டி.வான்ஸ் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share