சர்ச்சை நாயகன் டிடிஎஃப் பாஸ்போர்ட் கேட்டு மனு..! வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு பாஸ்போர்ட் வழங்க கோவை மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிடக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு கோவை மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்ததாகவும், அப்போது தனது பைக் காஞ்சிபுரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் கைது செய்யப்பட்டவுடன், தனது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது பாஸ்போர்ட் விவகாரத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருந்து வருவதாக டிடிஎஃப் வாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். தான் மருத்துவ சிகிச்சைக்காகவும் படப்பிடிப்புக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளதால் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுமாறு தனது மனுவில் டிடிஎஃப் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா நட்பால் வந்த வினை.. ரீல்ஸ் மோகத்தில் கணவன் கொலை.. கள்ளக்காதலனுடன் யூடியூபர் கைது..!
இந்த வழக்கு விசாரணையின் போது, டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் நிலவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது நான்கு வழக்குகள் நிலவையில் உள்ளதாகவும், ஆந்திராவிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்களை தாக்க செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: விசாரிச்சு தான் சாதி சான்றிதழ் குடுக்கணும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் செக்..!