×
 

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... TTV குறித்த கேள்விக்கு நைனார் சூசக பதில்!

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு நயினார் சூசகமாக பதில் கூறியுள்ளார்.

சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் டெல்லியில் சந்தித்தார். எடப்பாடி பழனிச்சாமி அமித் உஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நிர்வாகிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலை 10:30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது, மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாகவும், அவருடன் அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுக இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன் என்று கூறினார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என சூசகமாக பேசினார். டிடிவி தினகரன் கூட்டணியில் மீண்டும் இணைவாரா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். கூட்டணியில் இணைவது தொடர்பாக டிடிவி தினகரனிடம் கேளுங்கள் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மீண்டும் TTV, OPS...! என்டிஏ கூட்டணி குறித்து இபிஎஸ் உடன் பாஜக தலைகள் தீவிர ஆலோசனை...

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டம் வருவதை எல்லாம் பார்த்து திமுக - தவெக இடையே தான் போட்டி என்றெல்லாம் விஜய் கூறக்கூடாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! அதிமுகவுடன் இணைந்து அனல் பிரச்சாரம்... அண்ணாமலை அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share