சசிகலாவை கூட்டணியில் சேர்க்க ஐடியாவே இல்ல..! எதற்காக அமித் ஷா உடன் சந்திப்பு?.. டிடிவி தினகரன் விளக்கம்..!!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பிற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற எவ்வாறு செயல்பட வேண்டும் என அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பியூஸ் கோயலும் சென்னை வரமுடியாது என்பதால் டெல்லி வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் சிக்கல்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு...!
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படாததால் தமிழ்நாட்டிற்கு முறையாக நிதி வரவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். பீகாரில் வெற்றி பெற்றதைப் போல வரும் தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறியுள்ளார். சசிகலாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும் திட்டமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொகுதி பங்கேடு குறித்து அமித் ஷா உடன் பேசவில்லை என்றும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!