×
 

தொகுதி பங்கீட்டில் சிக்கல்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு...!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டிடிவி தினகரன் சந்தித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது.

பாஜக தமிழகத்தில் தனது தேர்தல் இருப்பை வலுப்படுத்த விரும்புவதால், கடந்த தேர்தல்களை விட கணிசமாக அதிக தொகுதிகளை கோரி வருகிறது. பாஜக 45 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக அதை ஏற்க மறுப்பதாகவும் தெரிகிறது. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், மொத்தமாக சில சிறிய கட்சிகளுடன் சேர்த்து 38 வரை செல்லலாம் எனவும் பேச்சுகள் நடைபெறுகின்றன.

ஆனால் இதில் இறுதி ஒப்புதல் இன்னும் எட்டப்படவில்லை.பாமக, அமமுக போன்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கோரி வருகின்றன.  டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். என் டி ஏ கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித் ஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூடுதல் தொகுதிகள் கேட்பதாகவும் ஆனால் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதி ஒதுக்கப்படும் என்று அதிமுக விடாப்பிடியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் பாஜக அதிக தொகுதிகள் கேட்பதால் தொகுதி பங்கீட்டில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். இதை அடுத்துதான் டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share