ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!
விமானத்தில் அத்துமீறியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனைகளின் நீட்சி என்றார்.
விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் அதிருப்தி சம்பவத்தை டிடிவி தினகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு திறமையில்ல... அரசு பணி கானல் நீர் தான்..! TTV தினகரன் விமர்சனம்..!!
தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர் தான் என்பது தெரியுமா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்று கேட்டுள்ளார்.
பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!