×
 

“ரீல்ஸ் போட நேரம் இருக்கு... பக்தர்களை கவனிக்க நேரமில்லையா?” - தினகரன் தாக்கு..!

திருப்பரங்குன்றம் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

வைகாசி மாதத்தின் விசாக நட்சத்திரம் கொண்டாட்டத்துடன் முருகப் பெருமானின் அவதார தினமாக வைகாசி விசாகம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படையான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து, பெரும் பக்தி மழையைப் பொழிந்தனர்.

மதுரை அருகே அமைந்துள்ள இந்தப் புனிதத் தலம் இன்று காலை முதலே பக்தர்களின் அலை அலையான வருகையால் நிரம்பி வழிந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகமான நிலையில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிகழ்வை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “சிங்கப்பெண் launch ஆகல... crime மட்டும் nonstop!”... TTV தினகரன் விளாசல்..!!

நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துவதாக கூறினார்.

இதையும் படிங்க: சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share