அதிமுகவுடன் இணையும் அமமுக..? நடக்கப்போவது என்ன..? டிடிவி தினகரன் பேட்டி..!
அதிமுகவுடன் அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் தலைமையில் 2018 மார்ச் 15 அன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களில் சசிகலா ஆதரவாளர்களுக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுத்ததால் தினகரன் வெளியேற்றப்பட்டார். இதனால் கட்சியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, புதிய அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.
அம்முக, அம்மா பெயரைத் தாங்கி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி வளர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பினரும் தனித்தனியே போட்டியிட்டு வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் அம்முக இணைந்தது. தினகரன் தலைமையிலான அம்முகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த இணைவு, அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் அதிமுகவும் இணைய வேண்டும் என்றும் சசிகலாவையும் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைக்க வேண்டிய சூழல் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடினமான காலங்களில் அதிமுகவுடன் இருப்பதாகவும் கூறினார். அதிமுகவுடன் இருக்கிறோம் என்றும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒரே கட்சியாக செயல்படுவதற்கான சூழல் வந்திருப்பதாக கருதவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!