×
 

கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது..! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி..!

கூட்டணியில் தாங்கள் உள்ளோமா இல்லையா என அதிமுக சொல்லக்கூடாது பாஜக தான் கூற வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் ஒருபோதும் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமில்லை என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நத்தம் விஸ்வநாதனுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய டிடிவி தினகரன் தாங்கள் கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை அதிமுக சொல்லக்கூடாது என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை பாஜக தானே தவிர அதிமுக இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், தங்கள் கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை பாஜக தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிடிவியின் தன்னிச்சை செயல்பாடு..! நொறுங்கியது கூட்டணி தர்மம்.. சிக்கலில் அமமுக..!

முதுகுளத்தூர் தொகுதியில், தான் போட்டியிடுவது தொடர்பாக இப்போது கூற முடியாது என கூறியுள்ள அவர், கூட்டணி தர்மத்தை மீறுவது போல் ஆகிவிடும் என்றார். தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், கடந்த இபிஎஸ் ஆட்சியை விட நான்காண்டு திமுக அரசு மோசமாக உள்ளது என்றும் சோளிங்கர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்தது தொண்டர்களை உற்சாகப்படுத்த தான் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிரடியாக இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை; அமமுக துணைப் பொதுச்செயலாளர் வீட்டில் ரெய்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share