செஞ்சி சிறுமி எங்கே.? திணறும் போலீஸ்.! ஒடுக்க மட்டும் தான் காவல்துறையா.? விளாசிய TTV தினகரன்.!!
செஞ்சி சிறுமி விஷயத்தை சுட்டி காட்டி டிடிவி தினகரன் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டு நடுப்பட்டு பகுதியில் கடந்த 11ஆம் தேதி மாயமான ஏழு வயது சிறுமியை பத்து நாட்கள் கடந்தும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற நிகழ்வு மிகுந்த வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சிறுமி மாயமானது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்து தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய அளவிலான துப்புகூட கிடைக்காமல் காவல்துறையினர் திணறிக்கொண்டிருப்பது, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக தினகரன் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் குற்றங்களைக் கையாளுவதில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தற்போது அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்கான ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஏவல்துறையாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் மீதும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் திமுக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!
இதுமட்டுமல்லாது, விழுப்புரம் அருகே ஏழு வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் அருகே எட்டு வயது சிறுமி மாயமாகிப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எனத் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தினகரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!