×
 

சட்டவிரோத மணல் கொள்ளை..! இரும்பு கரம் கொண்டு அடக்குங்க CM..! TTV தினகரன் வலியுறுத்தல்..!

மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக ttv தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் தொடர்ந்து வருவதாக டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதாக அவர் விமர்சித்தார்.

இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், சில சட்டமன்ற உறுப்பினர்களே மணல் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும்...” - டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள்... கட் அண்ட் கறாராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டார்.தமிழக மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share