×
 

லெட்டர் எழுதிட்டா போதுமா.? வீர வசனம் பேசுனீங்களே விஜய்..! மீனவர்களுக்காக குரல் கொடுத்த டிடிவி தினகரன்..!!

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக கடிதம் மட்டும் எழுதினால் போதுமா என முதல்வர் விஜய் கே டி வி தினகரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என கேள்வி எழுப்பினார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய ஜோசப் விஜய், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? என்று கேட்டுள்ளார். எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும்  மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: தொட்டா விடமாட்டேன் சொன்னீங்களே..! தொடரும் லஞ்சம் குற்றச்சாட்டு..! .TTV தினகரன் விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share