இன்னொரு சிங்கப்பெண் படை வேணும் போலையே..! TVK நிர்வாகியால் பாலியல் தொல்லை... வெட்கக்கேடு முதல்வரே..! விளாசிய TTV..!
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஒரு திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று, ஆபாசமான சைகைகளைக் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற தவெக நிர்வாகி ஒருவரைப் பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இதுகுறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார். தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லை என்று மேடைக்கு மேடை வீரவசனங்கள் பேசும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்கள் தொடர்ந்து சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது தீர்வு காணப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர், தன் கட்சியிலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாதது வெட்கக்கேடான விஷயம் என்று தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிர்வாகியைப் பொதுமக்களே நடத்திய விதம், அரசின் பாதுகாப்பு அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கருதுகிறார்.
இதையும் படிங்க: சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் கூறும் தினகரன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றிவிட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே அடுத்த குற்றங்களுக்கு தடையாக இருக்க முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!