நூலகத்திற்குள் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! பீதியில் வாசகர்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நூலகத்திற்குள் புகுந்து இளைஞரை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜர் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் இருந்த ஒரு இளைஞரை மர்மகும்பல் அரிவாளால் தாக்க முயன்றுள்ளனர். ஆர்.சி தெருவை சேர்ந்த அன்னராஜ் என்ற இளைஞரை தான், அந்த மர்மகும்பல் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் அவரிடம் தகராறு செய்த அந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அங்கிருந்து அண்ணராஜ் ஓடிய நிலையில் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.
இதனால் பலத்த காயமடைந்த அண்ணராஜை அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அன்ன ராஜை வெட்டிய கும்பல் யார்... காரணம் உள்ளிட்டவை தொடர்பாக விசாரித்து வருகின்றனர். நூலகத்திற்குள் புகுந்து இளைஞரை வெட்டிய சம்பவத்தால் வாசகர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விபத்து எதிரொலி! ஆட்சியர்கள் இதை செய்ய தவறினால் அவ்வளவுதான்... தமிழக அரசு அதிரடி!
இதையும் படிங்க: #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!