பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!
பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தை வெளியிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார் இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. பிறகு மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் விவரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. BNS பிரிவு 74 மற்றும் POCSO பிரிவு 23(2)ன் படி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் பெயர் உட்பட விவரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அது அந்த சிறுமியின் மாண்பையும் தனிப்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதை தடுப்பதாகும்.
இதையும் படிங்க: படுகொலை செய்யப்பட்ட மாணவி..!! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...! 4 வது நாளாக போராட்டம்..!!
அதன்படி குளத்தூர் காவல் நிலைய சிறுமி வழக்கில் சிறுமியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் பேனர் அமைத்து தெரியப்படுத்துவதும், குழந்தையின் புகைப்படத்தையோ பெயரையோ வைத்து அஞ்சலி செலுத்துவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவது சிறுமியின் மாண்பையும் தனிப்பட்ட பாதுகாப்பையும் சீர்குலைப்பதாக கருதப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் விவரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே யாரும் இதுபோன்ற செயல் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே... “வடிவேலு பேச பேச திமுக அழிஞ்சி போகும்...” - அறிவாலயத்திற்கு சாபம் விட்ட அண்ணாமலை...!