×
 

ஓங்கி குத்தணும்... விஜயை விமர்சித்த நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார்!

விஜயை விமர்சித்த நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். இவரது அரசியல் நுழைவு, தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால், மதுரை மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிட்டு பேசிய விதம், அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்று நடிகர் ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஞ்சித், விஜய்யின் உரையில் பயன்படுத்தப்பட்ட மிஸ்டர் மோடி என்ற வார்த்தையையும், முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டதையும் மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கண்டித்தார். 

இந்த வார்த்தைகள் அரசியல் நாகரிகத்திற்கு மாறானவை என்றும், இவ்வாறு பேசுவது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 2014ஆம் ஆண்டு கோவையில் பிரதமர் மோடியை விஜய் சந்தித்தபோது, அவர் பூனைக்குட்டி போல் அமைதியாக இருந்ததை மறந்துவிட்டதாகவும், இப்போது இவ்வாறு பேசுவது மூளையில் பிரச்சனை இருப்பதற்கு அடையாளம் என்றும் கடுமையாக விமர்சித்தார். 

ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகள் இவ்வாறு விஜய்யின் பேச்சு முறையையும், அவரது அரசியல் அணுகுமுறையையும் மையமாகக் கொண்டவை. மதுரை மாநாட்டில் விஜய், நான் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவன், பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் இல்லை என்று கூறியதை, மறைமுகமாக மற்ற நடிகர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக ரஞ்சித் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... பற்றி எரியப்போகும் அரசியல் களம்...!

 இந்தக் கருத்து, குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம் என்று அவர் குற்றம்சாட்டினார். இதற்கு மேலும், விஜய்யின் இந்தப் பேச்சு அவரை நம்பி வரும் மக்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக அமையும் என்று ரஞ்சித் எச்சரித்தார்.  அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை வந்து விட்டதாகவும், தனக்கு வரும் கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றுவதாகவும் தெரிவித்தார். அதனை ஓட்டாக குத்துவோம் எனவும் கூறினார். இந்த நிலையில் விஜயை கடுமையாக விமர்சித்த நடிகர் ரஞ்சித் மீது தமிழக வெற்றி கழகத்தினர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். விஜய் குறித்த பேசிய ரஞ்சித் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: “ஏன் வழக்கு போட்டேன்னு தவெகவினர் மிரட்டுறாங்க”... மதுரை எஸ்.பி.யிடம் பெரம்பலூர் இளைஞர் சரத் பரபரப்பு புகார்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share