×
 

“ஏன் வழக்கு போட்டேன்னு தவெகவினர் மிரட்டுறாங்க”... மதுரை எஸ்.பி.யிடம் பெரம்பலூர் இளைஞர் சரத் பரபரப்பு புகார்...! 

தமிழக வெற்றிக் கழக தரப்பில் என் மீது புகார் அளித்தால் நான் அதை சந்திக்கத் தயார் என பவுன்சர்களால் தூக்கிவீசப்பட்ட பெரம்பலூர் இளைஞர் சரத் தெரிவித்துள்ளார்/.

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தள்ளிவிட்டதால் காயமடைந்ததாக பெரம்பலூரில் புகாரளித்த இளைஞர் சரத்குமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி எறிந்த விவகாரம் குறித்து புகார் அளித்த அவர், தவெகவினர் தன்னை போன் செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத், தமிழக வெற்றிக் கழக தரப்பில் என் மீது புகார் அளித்தால் நான் அதை சந்திக்கத் தயார். எனக்கு எந்த ஒரு கட்சி பின்புலமும் இல்லை.  மற்றவருக்கு இதுபோல் நடக்கக்கூடாது என புகார் அளித்துள்ளேன் என்றார்.

புகாரை வாபஸ் பெற வேண்டும் என தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது.  மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் அரியலூரில் இருந்து அந்தோத்ய ரயிலில் ஏறி மதுரைக்கு வந்தேன்.என்னைப்போல் ஒருவர் நான் தான் அந்த இளைஞர் என வீடியோ பரப்பி வருகிறார்.

இதையும் படிங்க: “விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...! 

தெரியாத எண்களிடம் இருந்து என்னை தொடர்பு கொண்டு எதற்காக வழக்கு தொடுத்தாய் என மிரட்டுகிறார்கள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். 

இதையும் படிங்க: அதிவேகமாக வந்த தவெக நிர்வாகி கார்... பைக்கில் திருமண பத்திரிக்கை வைக்கச் சென்ற மணமகன், தாய், தந்தையுடன் பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share