×
 

கரூர் கோரச் சம்பவம்... அதிரடி காட்டும் போலீஸ்... முந்திக்கொண்ட தவெக முக்கிய தலைகள்...!

கரூர் சம்பவம் எதிரொலியாக முன்ஜாமின் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share