MGR, அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன்... தவெக தொண்டர்கள் புடைசூழல் மரியாதை...!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ளார். தனது கட்சியை முன்னிலைப்படுத்தி 2026 இல் முதல்வர் அரியணையில் ஏறுவதை நோக்கமாகக் கொண்டு களமாடி வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இளைய சமுதாயத்தின் வரவேற்பு அதிகளவு இருந்தது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே விஜய்க்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்க அனுபவம் வாய்ந்த நபர்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
விஜயின் தேர்தல் திட்டமிடுதலில் குறைபாடுகள் இருப்பதாகவும் அரசியல் அனுபவசாலிகள் யாரும் இல்லாததால் தான் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதில் கொடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். பொதுவாக அதிமுகவில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணைந்த நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் எல்லாவற்றிற்கும் மாறாக தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்து இருக்கிறார். அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என கூறிவந்த செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை திடீரென நேற்று ராஜினாமா செய்தார். திமுகவில் இணைவாரா அல்லது தமிழக வெற்றி கழகத்தில் இணைவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் செங்கோட்டையன்.
இதையும் படிங்க: “சேகர் பாபுவை சந்திக்கவில்லை... பாஜகவை கண்டு கொள்ளவில்லை” - படு ஓபனாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!
அவரை பொன்னாடை போர்த்தி கட்சி துண்டு அணிவித்து விஜய் இன்முகத்துடன் வரவேற்றார். 2026-ல் விஜய் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் செங்கோட்டையன் பேசி இருக்கிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை செலுத்தியுள்ளார். தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்திலும் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ....!! அசிங்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா..! - பிரஸ் மீட்டில் தவெக துண்டை அணிய மறுத்த செங்கோட்டையன்...!