×
 

#2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் முன்னதாகவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி, இரத்த தான முகாம்கள் மற்றும் இலவச உணவு விநியோகம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கிறது. இவை மக்களிடையே கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க உதவி வருகிறது. 2206 தேர்தலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது. 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தஞ்சாவூரில் இருந்து விஜய்யின் மாநிலம் முழுவதுமான பிரசார சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. முன்னதாக, மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கங்கள் மற்றும் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளன. 10,000 கிராமங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடந்த பூத் முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், விஜய் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், பூத்-நிலை அமைப்பை வலுப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!

விஜயின் பிரச்சாரத்திற்கு முன்னதாக, மண்டல அளவிலான பூத் கமிட்டி கருத்தரங்கங்கள் மற்றும் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளன. மாநிலத்தை 10 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தீவிரமாக பிரசாரம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், பொதுமக்களைச் சந்திப்பது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த விஜய், பெரியார் உன்னிடம் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: நீங்க போராட அனுமதி இல்லை! தவெகவுக்கு தொடரும் சிக்கல்! என்ன காரணம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share