அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் தவெக மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தில் இருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அஜித் குமாரின் மரண வழக்கு கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்ட பிறகு, ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜித் குமாருக்கு நடந்த சம்பவங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை படிக்கும்போது மனம் பதறுவதாக தெரிவித்தனர். அந்த அளவுக்கு கொடூரமான மிருகத்தனமான முறையில் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாகவும், சாதாரண கொலையே அல்ல என்றும் தெரிவித்தனர்.
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், சென்னை எழும்பூரில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் வேறொரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்று இருப்பதால் வேறு தேதியிலும் அல்லது வேறு இடத்திலோ ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை ஆறாம் தேதி போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கூறி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அஜித்குமார் மரண வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கஸ்டடி மரணம்.. கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்..!
அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் என்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மனு என்னிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்கும் படியும் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: #SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!