×
 

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!

பாலியல் தொல்லை கொடுத்த காவலரை மாணவி செருப்பால் அடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள தமிழக வெற்றி கழகம் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளது.

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த காவலரை மாணவி செருப்பால் அடித்த நிகழ்வை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் இந்த "விடியல்" அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குப் இலவசப் பயணம் என்ற கவர்ச்சித் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர், அதே பேருந்துகளில் அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடிகிறதா என்பதை உறுதி செய்யத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து கிடப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பாக, ஓடும் பேருந்தில் ஒரு மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு காவலரே செருப்பால் அடிக்கப்பட்ட சம்பவம், இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையை ஊர் மெச்சப் பறைசாற்றுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

பொதுவெளியில் ஒரு மாணவிக்கு இத்தகைய இழிநிலை நேருமென்றால், இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், அந்தத் துறையையே கேலிப்பொருளாக்கி வைத்துள்ளார் என்றும் ஒரு மாணவி ஆத்திரத்தில் காவலரைத் தாக்கும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றால், காவல்துறை மீது மக்களுக்கு இருந்த அச்சமும் மரியாதையும் காணாமல் போயுள்ளதையே இது காட்டுகிறது என்றும் குற்றவாளிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றப்பட்டதன் விளைவைத்தான் இன்று மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகம், இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கும், வன்முறைச் சம்பவங்களுக்கும் போதைப்பொருள் புழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது என்றும் இதைத் தடுக்கத் துப்பில்லாத இந்த அரசு, வெறும் விளம்பர மேக்-அப்களைப் போட்டுக்கொண்டு காலத்தைக் கடத்துவது வேதனையளிக்கிறது எனவும் கூறியது.

இதையும் படிங்க: NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share