அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!
பவளவிழா பாப்பா இப்போது அழுமுஞ்சி பாப்பாவாக மாறி இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் சமீபகாலமாக தொடரும் கடும் வார்த்தைப் போரில் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்தது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசிய பேச்சு. தமிழக வெற்றிக் கழகம் இந்தப் பேச்சை கடுமையாக விமர்சித்து, ஸ்டாலின் மற்றும் திமுகவை “கனவு காணும் குடும்பக் கம்பெனி” என்று சாடியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார். “அப்பாவை அங்கே தேடாதீங்க; மகளிர் உரிமைத் தொகை இருக்கும்வரை நான்தான் முதல்வர்” என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சு, தவெக ஆட்சியின் கீழ் திமுகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
ஸ்டாலின் தனது செல்வாக்கு இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தவெக தரப்பில் இதை “பட்டப்பகல் கனவு” என்று கடுமையாகச் சாடியுள்ளனர். “நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்” என ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறுவது, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு குடும்பக் கட்சியின் ஏக்கத்தைப் பிரதிபலிப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்த பிறகு, ஸ்டாலின் இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் அதுவும் பட்டப்பகலில் ஆட்சி அதிகாரத்தைப் பற்றி கனவு காண்பது அரசியல் மரியாதைக்கு உகந்ததல்ல என்று தவெகவினர் கூறுகின்றனர். கனவு காண்பது தனிப்பட்ட உரிமை என்றாலும், அதை ஒரு கல்யாண வீட்டில் பகிரங்கமாக வெளிப்படுத்துவது, திமுகவின் தற்போதைய அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!