"ரூ.1000"... மாணவர்கள் நிம்மதி... வங்கி கணக்குகளில் வரவு வைத்த புதிய தவெக அரசு..!
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஆயிரம் ரூபாய் வங்கி கணக்குகளில் புதிய அரசு வரவு வைத்துள்ளது .
தமிழக அரசின் கல்வி நலத் திட்டங்களில் முக்கிய இடம் பெறும் ஒன்று தமிழ்ப் புதல்வன் திட்டம். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்தத் திட்டம், மாணவர்களின் கல்விச் செலவுகளை ஓரளவு குறைத்து, அவர்களின் உயர்கல்வி தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.
இதற்கு இணையாக மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டமும் செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், இளங்கலை, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளை முடிக்கும் வரை இந்த உதவித்தொகையைப் பெற தகுதியுடையவர்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களும் இதன் பலனைப் பெறலாம். வேறு சில உதவித்தொகைகளைப் பெற்றாலும் இந்தத் திட்டத்தின் பலன் தடையின்றி கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க..! தெரிஞ்சு பண்ணல... மாற்றுத்திறனாளிகள் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..!
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் வழக்கம் போல் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வரவு அளிக்கப்படுவது வழக்கம். இந்த மாதம் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் தற்போது பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளியில் பயின்று கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!