×
 

விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!

விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட புகாரில் தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியில் அமைந்த நாரை ஏரியில், விவசாயப் பணிகளுக்காக வண்டல் மண் எடுக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறையான அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியின் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலர் புலவேந்திரன் என்பவர் அங்கு சென்று, விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் பணம் கோரியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விவசாயிகள் உரிய அனுமதி பெற்று மண் எடுத்து வரும் போது, புலவேந்திரன் “இப்போது நாங்கள்தான் அரசு, எங்களிடம் பணம் கொடுத்துவிட்டுத்தான் மண்ணை எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற அதிகாரத் தோரணையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அவரது சொகுசு காரைச் சுற்றி வளைத்து தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவத்தின் போது விவசாயிகளில் ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பல விவசாயிகள் “விஜய் கட்சியில் இருந்து தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது திமுகவா அல்லது அதிமுகவா?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். பாமக ஒன்றியக் கவுன்சிலர் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இந்த விவகாரம் தவெக ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியது. 

இதையும் படிங்க: இரண்டே கேள்வி... நெற்றில் பொட்டில் அடித்தது போல் விஜயை தெறிக்கவிட்ட கனிமொழி... முதல் கேள்வி தான் ஹைலைட்டே...!

இந்த சர்ச்சைக்குப் பிறகு தவெக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலர் புலவேந்திரனை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது. 

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share