விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!
விசிகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது மட்டுமின்றி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் மோதல் சம்பவம் அரங்கேறியது. விசிகவினர் ஆ.ராசாவின் பேச்சுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், திமுகவினரும் எதிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டு, தாக்குதல் நடைபெற்றது.
இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது கூட்டணியில் இருக்கும் வரை தோழர், தோழமை என்று பேசி வந்த திமுக, இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில், விசிகவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியும், அடித்து உதைத்தும் மனசாட்சியில்லாமல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, இதுதான் தங்களின் உண்மை முகம் என்ற சுய ரூபத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டி இருப்பதாக கூறியது.
மக்கள் த.வெ.க.விற்கு அளித்து வரும் பெரும் ஆதரவை அறிந்து த.வெ.க வுக்கு ஆதரவாக ஆட்சியிலும் களத்திலும் நிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்களை ஆதிக்க வெறியுடன் திமுகவினர் அடித்து விரட்டிய செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய திமுகவினர், தொடர்ந்து கலவரத்தை தூண்டி விட திட்டமிடுகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!
போராட்டம் என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒடுக்கப்பட்டச் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கலவரம், வன்முறைப் பாதையில் திமுக செல்ல முயன்றால், மக்களால் மறுபடியும் மறுபடியும் வீழ்த்தப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்படுவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!