#BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக ஒரு கோடி வாக்குகளை கடந்தது.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிட்டார். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் முடிவு, கட்சியின் தன்னம்பிக்கையை பிரதிபலித்தது. மக்கள் மத்தியில் த.வெ.க.க்கு ஏற்பட்டுள்ள ஆதரவு குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் இந்தக் கட்சியை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!
தேர்தல் பிரசாரத்தில் விஜய் பங்கேற்ற கூட்டங்கள் பெரும் கூட்டத்தைத் திரட்டின. குழந்தைகளைப் பெற்றோரை வாக்களிக்கத் தூண்டுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தது, குடும்பங்களை ஒன்றிணைத்து வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவியது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!