×
 

ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், திருக்குறள் கூறிய அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாலின் சார் மற்றும் மற்றும் பலர் போல அள்ளி விட மாட்டோம். மனஉறுதி, தேடல், உழைப்பு மூலம் கிடைப்பதே உண்மையான இன்பம். இது நேர்மையான உத்தரவாதம்.

ஒருத்தர் பத்தாயிரம் கொடுத்தால், இன்னொருத்தர் 8000 ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கிறார். ஒருத்தர் பிரிட்ஜ் கொடுத்தா, இன்னொருத்தர் பிரிட்ஜ் வாங்க டோக்கன் கொடுக்கிறார். இரண்டு பேருமே மீனவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் l. இரண்டு பேருமே பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படி இரண்டு பேருமே ஒரே தேர்தல் அறிக்கையை பெயரை மாற்றி, கலரை மாற்றி தந்திருக்கிறார்கள்.

இவங்க இரண்டு பேரும் வேறு, வேறு இல்லை ஒரு குடையின் கீழ் இருக்கும் கொள்கை கூட்டம் தான். ஆனால் இந்த இரண்டு ஊழல் கூட்டம் மாதிரி எல்லாம் நாம் ஏமாற்ற மாட்டோம் என்று தெரிவித்தார். நமக்கு மக்கள் தான் முக்கியம் அவர்களின் மனது தான், முக்கியம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

அவர்களின் வாழ்க்கை தான் முக்கியம் எனவும் விஜய் கூறியுள்ளார். என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பிராக்டிக்கலாக வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறோம் என்றும் எதார்த்தத்திற்கு உட்பட்ட அறிவிப்புகளை தான் கூறியிருக்கிறோம் எனவும் விஜய் தெரிவித்தார். த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதனை எடுத்துரைத்தார். 

இதையும் படிங்க: தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார்..! எஸ் பி அலுவலகம் முற்றுகை.. பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share