×
 

"திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தவெக சென்னை மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை மத்திய மாவட்டம் சார்பில் இன்று பிரம்மாண்டக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் குறித்தும், ஆளுங்கட்சியின் நெருக்கடிகள் குறித்தும் அதிரடியாக உரையாற்றினார்.

"கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் இன்றும் பல ஏழைத் தாய்மார்கள் விறகு அடுப்பில் சமைக்கும் அவலநிலை உள்ளது. அவர்களின் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டே, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்" என விளக்கமளித்தார்.

தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வசதி தவெக ஆட்சியில் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:  "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

விஜய்க்குத் திமுக அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. குடும்பப் பிரச்சினைகள் முதல் பல வழிகளில் அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால், நேற்று ஒரே மேடையில் பெண்களுக்கான அதிரடித் திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்துவிட்டார் எனச் சாடினார்.

கரூரில் தவெக பேரணியின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். "விஜய் மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிடுவார் என்ற அச்சத்தினால் திட்டமிட்டே இத்தகைய இடையூறுகளைச் செய்கின்றனர் என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும், தற்போது மக்கள் தவெக-வை மட்டுமே முழுமையாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் விஜய் நேரடியாக வீதி வீதியாக வந்து மக்களைச் சந்திப்பார் என அவர் உறுதி அளித்தார்.

தவெக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, 2026 தேர்தலுக்கான தவெக-வின் களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share