×
 

விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஒவ்வொருவர் பேசுவதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் .

கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனை எதிர்த்து போட்டியிட்ட வினோத் ரவி, கடும் போட்டிக்குப் பிறகு வெறும் 679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்ற வினோத், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வினோத் கையாண்ட உத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்வது சவாலாக இருந்த சூழலில், வினோத் ரவி தொழில்நுட்பத்தைப் புகுத்தினார். கும்பகோணம் தொகுதியில் "3D ஹோலோகிராம்" டெக்னாலஜி மூலம் விஜய்யின் முப்பரிமாண உருவத்தை மக்கள் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் தோன்றச் செய்தார். விஜய் நேரில் நின்று பேசுவது போன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்ட இந்த நவீனப் பிரச்சாரம், இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

 அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கும்பகோணம் வந்து இருந்த வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணம் மடத்தை தெருவில் உள்ள பகவத் விநாயகர் ஆலயத்தில் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ,

இதையும் படிங்க: மருத்துவத்தில் தனியார் மயமா? வெட்கக்கேடு... தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!

 மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வருடன் இதுகுறித்து பேசி வருகிறோம்.  திங்கள்கிழமை இது குறித்து தெரியவரும் என்றார். 

மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அமைச்சர் சிவக்குமார் பேசி வருவது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவர் ஒவ்வொன்று பேசி வருவார்கள், இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என்றார் .  

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து கேட்டதற்கு,  தமிழக முதல்வர் தான் இது குறித்து அறிவிப்பு செய்வார் என்றார்.

கும்பகோணம் நகருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்றும் கும்பகோணம் நகரில் நடைபெற உள்ள மகாமக விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். 

 கரூர் சம்பவம் குறித்து கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார் .

இதையும் படிங்க: தனியார் மயமாகிறதா மின்சாரத்துறை?... தவெகவுக்கு மீண்டும் செக் வைத்த சிவசங்கர்... அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share