×
 

விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!

விஜய்க்கு பாதுகாப்பு முறையாக அளிக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் தனது முதல் பிரச்சாரத்தை பெரம்பூரில் தொடங்கினார். பெரம்பூர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்றபோது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரத்துக்கு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு எப்போதும் முறையான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் உயர் அதிகாரிகள் யாரும் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் பேச்சை மக்கள் கேட்கக்கூடாது என்பதற்காக தடையை ஏற்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

விஜய் பரப்புரையின் போது பேருந்துகளை திட்டமிட்டு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நெரிசல் காரணமாக பொதுமக்களை விஜய் சந்திக்க முடியவில்லை என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள நிர்மல் குமார், விஜய் பரப்பரைக்கு செல்லும் போது மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்று பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் விஜய் பரப்புரைக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் அனுப்பியுள்ளார். விஜய்க்கு அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பிலும் குறைபாடு இருப்பதாகவும் கொளத்தூரில் முறையான பேரிகார்டுகள் கூட அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share