×
 

வரலாற்றில் முதல்முறை... திமுக, அதிமுக துணியாததை செய்து காட்டப்போகும் சி.எம்.விஜய் ... தடம்பதித்த தளபதி...!

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 

 தமிழக வெற்றிக் கழகத்தினுடைய ஆட்சி அமைக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அவர்களுடைய பெருமான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை நடைபெற இருக்கிறது. முதலில் சபாநாயகர் வருவார். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தினுடைய அரசு தொடர்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிவார். அதன் பிறகு அந்த வாக்கெடுக்கக்கூடிய நிகழ்வுகள் என்பது நடக்கும்.  தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்களிப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதை அதிகாரப்பூர்வமாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று இரவு அறிவித்திருக்கிறார்கள். 

இதற்கு முன் சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுவதுமாக காட்சிப்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியை மட்டுமே சட்டப்பேரவை நிகழ்வுகளை காட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினர் பேசக்கூடியதை காட்டவில்லை என்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. நேற்றிலிருந்து அதாவது கடந்த மூன்று நாட்கள் இரண்டு நாட்களாக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாகவே நேரலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோலவே இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் வழங்கப்படுமா என்கின்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. 

இதையும் படிங்க: சி.எம். பதவியில் தொடருவாரா விஜய்? - தனியார் பேருந்தில் சட்டமன்றம் வந்தடைந்த தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு கட்சி தற்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்வது இதுவே முதன் முறை, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் பெரும்பான்மையை நிரூவிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான ஒரு நிகழ்வை முழுவதுமாக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதை பொறுத்த வரைக்கும் ஆளுநருடைய உத்தரவின்படி மே மாதம் 13 ஆம் தேதி அதாவது இன்று சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்பது தான் அவருடைய உத்தரவாக இருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கு அவர்களுடைய பெரும்பான்மையான ஆதரவை கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்து பெரும்பான்மை என்பது நிரூபிக்கப்படும். 

120 எம்எல்ஏக்களினுடைய ஆதரவோடு தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் .120 எம்.எல்.ஏ.க்களுடைய ஆதரவு கடிதம் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையில் அந்த பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டியது அவசியம். 

இதையும் படிங்க: விஜய் கொடுத்த ஆஃபர்... அதிமுகவை சல்லி, சல்லியாய் உடைத்த சி.வி.சண்முகம்... கடைசி டீல் என்ன தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share