சி.எம். பதவியில் தொடருவாரா விஜய்? - தனியார் பேருந்தில் சட்டமன்றம் வந்தடைந்த தவெக எம்.எல்.ஏ.க்கள்...!
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியை உறுதிப்படுத்த முடியும்.
சட்டமன்ற தேர்தலில்108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 120 என்ற பலத்தோடு ஆட்சி அமைத்தது. பொறுப்பேற்றுருக்கக்கூடிய தவெக அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தி இருந்த நிலையில், இன்றூ சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியை உறுதிப்படுத்த முடியும்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்கள் மற்றும் திமுகவின் அதிரடி வியூகங்களுக்கு மத்தியில் தனது கூட்டணி கட்சிகளை ஒருங்கணைத்து இந்த தேர்வில் விஜய் எப்படி தேர போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு வரை நேரித்த அரசியல் இழுபறிகள் நள்ளிரவு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆளுநரின் நிபந்தனைகள் என அனைத்தையும் தாண்டி இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள விஜய்க்கு நிர்வாக ரீதியாகும் அரசியல் ரீதியாகவும் இது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.
இன்று காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வருவார். அதன்பிறகு அந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார். இதையடுத்து எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிப்பார்கள். டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடக்கும். இதில் மெஜாரிட்டியை நிரூபித்தால் விஜய்யின் ஆட்சி தப்பிக்கும். இதனால் தமிழக அரசியலில் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?
இதற்கு முன்னதாக குதிரை பேரம் நடப்பதை தடுப்பதற்காக தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தனியார் சொகுசு பேருந்து மூலமாக விடுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டில் திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனை வென்ற தவெகவின் சீனிவாச சேதுபதிக்கு வாக்களிக்க நீதிமன்றம் தடை போட்டுள்ளது. மேலும் தவெகவில் இருந்து ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த வாக்கும் குறையும்.
இதனால் தவெக பலம் 105 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட்டின் 2 எம்எல்ஏக்கள், விசிகவின் 2 எம்எல்ஏக்கள், ஐயூஎம்எல் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், அமமுகவில் வென்று தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால் விஜய் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!