×
 

பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வராக தொடர்வாரா விஜய்..? தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக்கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விஜய்யை அரசு அமைக்க அழைத்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன்படி மே 10 அன்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் சில தவெக அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர், மே 13-க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார். 

இன்றைய கூட்டத் தொடரில் காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தொடக்க உரையாற்றுவார். தவெகவின் 108 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2), விசிக (2), ஐயூஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளது. மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்த சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைமையில் சுமார் 30 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தவெக கூட்டணி வசதியாக பெரும்பான்மையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: புதிய முதல்வருக்கு அக்னி பரீட்சை..! என்ன செய்யணும்..! தவெக MLA- க்களுக்கு பயிற்சி.!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முழுமையாக எதிர்க்கும் என அறிவித்துள்ளது. திமுக தரப்பில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நிற்கும் எனக் கூறப்படுகிறது. இன்றைய வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்தால், விஜய் தலைமையிலான அரசு முழு பலத்துடன் செயல்படத் தொடங்கும். இது தமிழக அரசியலில் பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட புதிய சக்தியின் எழுச்சியை உறுதிப்படுத்தும். இன்று சட்டப்பேரவை கூட்டத்துடன் தொடங்கிய நிலையில் முதலமைச்சர். விஜய் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கு எடுக்க தொடங்கிய நடிகர் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் இதனை முன்மொழிந்தார். 

இதையும் படிங்க: வரலாற்றில் முதல்முறை... திமுக, அதிமுக துணியாததை செய்து காட்டப்போகும் சி.எம்.விஜய் ... தடம்பதித்த தளபதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share