ஓட்டு வாங்குவது காய்கறி வியாபாரமா.? காலம் மாறிப்போச்சு.. விளையாட்டே என் மதம்... பேரவையில் ஆதவ் அதிரடி..!!
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது சமூக நீதி கணக்கெடுப்பு என்பது வரலாறு என்றும் சமூக நீதி கணக்கெடுப்பை முதலமைச்சர் உத்தரவிட்டது வரலாற்று சம்பவம் எனவும் குறிப்பிட்டார். தமிழக வெற்றி கழகத்தினர் யாரும் வாக்களிக்க பணம் கொடுக்கவில்லை என்றும் நூற்றி எட்டு தொகுதி வெற்றி என்பது ஆறு கோடி மக்களின் வெற்றி எனவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றதன் மூலம் அம்பேத்கரின் கனவு நிறைவேறி உள்ளதை என்றும் பெரியாரின் சமூக நீதி நிறைவேறி இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியின் நூறாவது நாள் ஆட்சியில் சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டது வரலாறு என்றும் கூறியுள்ளார். விளையாட்டு தான் தனது மதம், மொழி, சாதி, குடும்பம் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கமாக பேசினார்.
ஒரு ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார். சாமானியனின் கனவு நிறைவேறி இருப்பதாகவும் தேர்தலின் போது யாரும் செலவு செய்யாதீர்கள் என முதலமைச்சர் விஜய் கூறியதாகவும் தெரிவித்தார். காய்கறி வாங்குவதைப் போல ஓட்டை வாங்கிய கலாச்சாரத்தை முதலமைச்சர் விஜய் மாற்றி இருப்பதாகவும் நான் விளையாட்டு வீரராக இருந்தபோது ஒரு ஷோ கூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன் என்றும் பேசினார்.
இதையும் படிங்க: மகப்பேறு விடுப்பில் மிகப்பெரிய மாற்றம்..! 3வது குழந்தைக்கும் 365 நாட்கள்”..! பேரவையில் அமைச்சர் சரத்குமார் அறிவிப்பு..!!
என்னுடைய பயிற்சியாளர் தான் தனது தேவையான உதவிகளை செய்து கொடுத்தார் என்றும் கூடைப்பந்து விளையாட்டு வீரரான தான், விளையாட்டுத்துறை அமைச்சரானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளின் தமிழர்களில் யாரும் ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை கூட வாங்கவில்லை என்றும் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலைகள்.! பராமரிப்பில்லாத அரசு கட்டிடங்கள்..! பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரை..!!