#BREAKING: விஜய் அரசின் Mega Move! அமைச்சர்களுக்கு இலாகா அறிவிப்பு! முழு விவரம்..!!
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.
அமைச்சர்களின் பதவியேற்பு நிறைவடைந்த நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டை எனக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. செங்கோட்டையனிடமிருந்து நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று பதவியேற்ற அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு முழு விவரம்.!
- ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
- கமலி - கால்நடைத்துறை
- வினோத் - வேளாண்துறை
- விஜயலட்சுமி - பால்வளத்துறை
- ரஞ்சித் குமார் - வனத்துறை
- ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை, பெண்கள் மேம்பாடு
- மரிய வில்சன் - நிதித்துறை
- மதன்ராஜ் - சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
- ராஜீவ் - சுற்றுச்சூழல் துறை
- ரமேஷ் - அறநிலையத்துறை
- விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை
- ராஜேஷ் - சுற்றுலாத்துறை
- ராஜ்குமார் - வீட்டு வசதி வாரியம்
- காந்திராஜ் - கூட்டுறவுத்துறை
- விஜய் பாலாஜி - கைத்தறித்துறை
- தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் - பத்திரப்பதிவு, வணிகத்துறை
- முகமது பர்வாஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
- சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை
- விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் கலால் துறை
- சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை
- குமார் - தகவல் தொழில்நுட்பத் துறை
இதையும் படிங்க: அமைச்சரவையில் இன்னும் 2 இடங்களே பாக்கி! எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு வாய்ப்பிருக்கிறதா?