விசில் போடு..! TVK தேர்தல் பிரச்சாரம் நாளை தொடக்கம்..! பிரச்சார குழு தீவிரம்..!
நாளை முதல் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய கட்சி. விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக திரைத்துறையை விடுவதாகவும் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.
கட்சியின் தொடக்கத்திலிருந்தே, விஜய் தனது ரசிகர்களின் ஆதரவை அரசியல் சக்தியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏற்கனவே சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியதே தமிழக வெற்றிக் கழகம். மாநாடுகள், பிரச்சாரம், மக்கள் சந்திப்பு என தேர்தல் வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் விஜய்.
தேர்தல் ஆணையம் தவெகவுக்கு 'விசில்' சின்னத்தை ஒதுக்கியது இளைஞர்களுக்கு எளிதில் நினைவில் நிற்கும் இந்தச் சின்னம், கட்சியின் பிரச்சாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரக் குழுவை விஜய் அமைத்திருந்தார்.
இதையும் படிங்க: திருமா. திமுகவின் அடியாள்..! ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்த விசிகவினர்..! கொந்தளிப்பு..!
கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நாளை முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் குழுவின் பிரச்சாரம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் மற்றும் தேர்தல் சின்னம் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக முன்கூட்டியே பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!