பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் அவசர உதவிக்காக மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், பாரப்பத்தி அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 237 முதல் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு இடம் தயாராகி வருகிறது, இதில் 217 ஏக்கர் வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அனுமதி கிடைக்காததால் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாடு லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் விக்கிரவாண்டி மாநாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் இரும் நடைபெறாமல் இருப்பதற்காக முழு வீட்டில் பணிகள் தற்போது நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: அமித் ஷா வர்றாரா? NO USE... அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!
இந்த நிலையில், தவெக 2-வது மாநாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர மருத்துவ தேவையின்போது பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ எடை வரையிலான பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பரிசோதனை மாநாட்டு திடலில் நடைபெற்றது. அதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: தவெக மாநாடு "L-O-A-D-I-N-G".... ஆகஸ்ட் 25 ஆம் தேதிய விஜய் SELECT பண்ண "SECRET" தெரியுமா?