தவெக கூட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம்.? வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுதா... TVK பதிலடி..!
TVK கூட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக கூறப்படும் தகவலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பின் பொதுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக சமீப காலமாக சமூக ஊடகங்களிலும் சில வட்டாரங்களிலும் பரவி வரும் தகவல் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வதந்தி முதன்மையாக தவெகவின் சமீபத்திய பிரம்மாண்டமான மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களின் வெற்றியால் ஏற்பட்டுள்ள பெரும் மக்கள் ஆதரவை சிதைக்கும் நோக்கில் பரப்பப்படுவதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2025-2026 காலகட்டத்தில் தவெகவின் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சி மற்றும் ஆளும் தரப்பினரை பதற்றமடையச் செய்துள்ள வளர்ச்சியால் இத்தகைய போலி தகவல்கள் வேகமாக பரவுவதாக அக்கட்சியின் ஐடி விங் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி நிதி பெற்றதாகக் கூறி, விஜய் மற்றும் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகள் என்று தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..! 2வது நாளாக துருவித் துருவி விசாரணை..!
தவெகவிற்கு மக்களிடம் கிடைத்து வரும் பேராதரவைச் சிதைக்கவே இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்று சாடியுள்ளது. தவெக மாநாட்டின் பிரம்மாண்ட வெற்றியும், இளைஞர்களிடையே எழுந்துள்ள எழுச்சியும் ஆளும் தரப்பைத் தூக்கமிழக்கச் செய்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு உள்ளது. அதன் வெளிப்பாடே இத்தகைய போலிச் செய்திகள் என்றும் ஆளுங்கட்சியினரே அதிகார பலத்தை வைத்துக் கொண்டு பொய்களைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள் எனவும் கூறியுள்ளது. தமிழக மக்கள் எதார்த்தத்தையும், உங்கள் அரசியல் நாடகங்களையும் நன்கு உணர்ந்துள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மது விற்பனையில் அசுர வளர்ச்சி… கஜானாவில் பொங்கிய போதை..! வெளுத்து வாங்கிய TVK அருண் ராஜ்..!