அதிகார மிரட்டலுக்கு இறையாகிறதா ஏழைகள் உயிர்? அழுகிய நிலையில் சடலம்..! தவெக சரமாரி கேள்வி..!!
அதிகார மிரட்டலுக்கு இரையாகிறதா ஏழை எளியோரின் உயிர் என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது.
திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில், ஒரு இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு நெஞ்சம் பதறுகிறது என்றும் ஒரு உயிர் மிகக் கொடூரமான, மர்மமான முறையில் போயிருக்கிறது என்றும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. அந்த இளைஞரின் குடும்பத்தினர் இன்று நீதி கேட்டு கல்குவாரியை முற்றுகையிட்டுள்ள காட்சிகள், சாமானிய மக்களின் வேதனையை உரக்கச் சொல்வதாகவும் கூறியுள்ளது.
இந்த கல்குவாரி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மகனுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ கடந்து போகப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் இடங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது, உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அந்த இளைஞர் எப்படி இறந்தார்? பாதுகாப்பு விதிமுறைகள் அங்கே பின்பற்றப்பட்டதா? அல்லது அதிகார மிரட்டலால் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டதா? அழுகிய நிலையில் உடல் மீட்கப்படுகிறது என்றால், அங்கே மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லையா? மரணம் நிகழ்ந்தும் அது வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்... தவெக மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்த வழக்கு..! அதிரடி நடவடிக்கை..!!
மகனை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரின் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இந்த அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறது என்றும் குற்றவாளிகள் எப்பேர்ப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னால் எந்த 'திமுக கரைவேட்டி' இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கெல்லாம் திமுக பதில் சொல்லாது, ஆனால் மக்கள் திமுகவிற்கு தேர்தலில் பதில் சொல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Breaking! திமுக கூட்டணியில் இருந்து விலகியது தவாக!! 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி! வேல்முருகன் அறிவிப்பு!