நாடக கம்பெனி திமுக... கட்டுமர கதை வேணாம்..! விளாசிய தவெக..!
திமுகவை தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம் செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் திமுகவை நாடக கம்பெனி என்று விமர்சித்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளுக்கு கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளது.2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு என்று கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா, குடும்பச் சுற்றுலாவா என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு என்று தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீரர்களைக் கட்சி விமர்சித்துள்ளது.Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, ஈர்த்த முதலீடுகள் எங்கே, உருவான வேலைவாய்ப்புகள் எங்கே என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம்... எல்லாம் CM கையில் தான்.! செங்கோட்டையன் பேட்டி..!
வெளிநாடு முதலீடா, இல்லை வெளிநாட்டில் முதலீடா என்று கேட்டு, கட்டுமரக் கதைகளைக் கட்டாமல் உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா என்று தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு சவால் விட்டுள்ளது.இந்த விமர்சனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!