×
 

சில மணி நேரத்தில் காலியான தவெக விருப்ப மனு... தொண்டர்கள் ஏமாற்றம்..! ஸ்தம்பித்த பனையூர்..!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்களிலேயே மனுக்கள் விற்று தீர்ந்தன.

தமிழக சட்டமன்ற தேர்தல் வேளையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்துகிறது. இதற்கு முன்னதாக விருப்ப மனுக்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்கள் பெற்று நேர்காணல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பிறகு வேட்பாளர் நேர்காணலை விஜய் நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது என்பது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. விஜய் தலைமையிலான இந்தப் புதிய கட்சி, தமிழக அரசியலில் புதிய காற்றை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பலரும் காத்திருந்தனர்.

அதனால், கட்சி தலைமை சார்பில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது, ஆர்வமுள்ளவர்களிடையே பெரும் கொண்டாட்டமே ஏற்பட்டது.ஆனால், அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, விருப்ப மனுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்று பிற்பகல் 12 மணி அளவில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கிய நிலையில் 2:30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழக வெற்றி கழகத்தில் நாளை விருப்ப மனு வாங்க வருமாறு தொண்டர்களுக்கு தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்... ஏன் கைவிட்டீங்க..! ஜெயக்குமார் ஆதங்கம்..!

விருப்ப மனு காலியானதால் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தை பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்வத்துடன் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் இடத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் மயக்கமடைந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தல் பணி தீவிரம்... தவெக இன்று முதல் விருப்ப மனு விநியோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share