"மூன்றாம் ஆண்டில் தவெக!" - பிப்ரவரி 2-ல் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை வரும் பிப்ரவரி 2, 2026 அன்று பிரம்மாண்டமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் பிப்ரவரி 2, 2026 அன்று பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், தனது இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் இந்தத் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலே தவெக-வின் முதல் இலக்கு என்பதால், இந்தத் தொடக்க விழா கட்சியின் களப்பணிகளை முடுக்கிவிடும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “பனையூர் பண்ணையாரே.. ஆகப்பெரும் ஊழல்வாதி நீங்கள்தான்!” விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!
தொண்டர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தவும், தேர்தல் களப்பணிகளுக்கானப் பயிற்சிகளை வழங்கவும் “களம் காணும் தொண்டர்களே” என்றப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகள், தேர்தல் நேரக் களப்பணிகள் மற்றும் தொண்டர்களுக்கான அரசியல் வழிகாட்டுதல்களை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.
இந்தப் புத்தகம் தற்போது பொதுவெளியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. தொண்டர்கள் இதனைப் படித்து அரசியல் அறிவைப் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின் போது, விஜய் தனது தொண்டர்களுக்கு "2026-ல் வரலாறு படைப்போம்" என எழுச்சி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-ஆம் ஆண்டு விழாவையொட்டிப் புதிய அறிவிப்புகள் மற்றும் தேர்தல் கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! - நிர்வாகிகளுடன் விஜய் நடத்தும் மகாபலிபுரம் ரகசியக் கூட்டம்