எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை... அரங்கம் அதிர உற்சாக வரவேற்பு..!! விழாக்கோலம் பூண்டது மதுராந்தகம்..!
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பெரும் சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் காலியாகின. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் இந்த இரு தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தது. மதுராந்தகம் தனித் தொகுதியில் மரகதம் குமரவேல் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்தப் பின்னணியில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேரடியாக பரப்புரையில் இறங்கியுள்ளார். செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இப்பரப்புரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொழுப்பேடு பகுதியை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்காக கட்சித் தொண்டர்கள் பெரும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகப் பயணித்து மதுராந்தகம் வழியாக மைதானத்தை அடையும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டது.
தொடர்ந்து மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். மதுராந்தகம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை செய்ய வந்த முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வரின் மதுராந்தகப் பயணத்தால் அடுத்து பயணத்தை அடுத்து பிரதான சாலைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!
முதல்வரின் கால்வாய் பரப்புரை நடைபெறும் இடத்தை நெருங்கிய நிலையில் சென்னை திருச்சி சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்வர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்றடைய இருக்கிறார். அவருக்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!