பள்ளி, கல்லூரிகளில் CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பதில் சொல்லுங்க..! தமிழக அரசுக்கு ஹை கோர்ட் ஆணை..!!
பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் அன்று பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான வி. கவி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள விதிகளை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மனுதாரர் தனது மனுவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது என்று வாதிட்டார்.
மாணவர்கள், அரசியல் கோஷங்கள் எழுப்புதல், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை ஏந்துதல், கட்சிக் கொடிகளை ஏந்துதல், பாடல்கள் பாடுதல், கேக் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி சூழலை பாதிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சௌதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. விரிவாக விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவும், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களால் நடந்த மாற்றம்..!! நாளையுடன் ஒரு மாதம் நிறைவு..!! விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு..?? ஒரு பார்வை..!!